×

நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி விசப்பட்ட விவகாரம் மிகவும் தீவிரமானது - கார்கே

 

நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி விசப்பட்ட விவகாரம் மிகவும் தீவிரமானது எனவும் இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். 

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த புதன் கிழமை பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இருவரையும் பிடித்து நாடாளுமன்ற காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் பட்டாசுகளை வீசியது தெரியவந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம் தொடர்பான விசாரணை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைதான 4 பேர் மீதும் உ.பா.சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி விசப்பட்ட விவகாரம் மிகவும் தீவிரமானது எனவும் இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய கார்கே, நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி விசப்பட்ட விவகாரம் மிகவும் தீவிரமானது, இதில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்; இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அவையில் விளக்கம் அளிக்க நாங்கள் வலியுறித்தி வருகிறோம், ஆனால் அவர் அதை கண்டுக்கொள்ளவில்லை. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, ஆனால் அதே சமயம் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேசுவதிலும் அர்த்தமில்லை. இந்த பாஜக அரசு காங்கிரஸை குறை கூறுவதிலும், நேரு, காந்தி போன்ற தலைவர்களை அவமதித்து வாக்கு சேகரிப்பதிலும் தான் குறியாய் உள்ளது. இவ்வாறு கூறினார்.