×

மத்திய அரசின் பழிவாங்கும் படலம்… ட்விட்டர் எம்டி மீது தொடர்ந்து பாயும் வழக்குகள்!

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் “ஜெய் ஸ்ரீராம்” என சொல்லவில்லை என்பதற்காக இஸ்லாமியர் பெரியவர் ஒருவரின் தாடியை இந்துத்துவர்கள் மழித்ததாகவும் அவரை துன்புறுத்தியதாகவும் ஒரு செய்தி பரவியது. விவகாரம் ட்விட்டரில் மிக வேகமாகப் பரவியது. ஒருசில பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், நடிகர்கள் பதிவிட்டனர். இது மதப் பிரச்சினை எனக் கூறி விமர்சித்தனர். இதையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்தச் செய்தி பொய்யானது என்றும், தாயத்து விற்றதில் மோசடி செய்ததாக அவரை ஆறு பேர் சேர்ந்து
 

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் “ஜெய் ஸ்ரீராம்” என சொல்லவில்லை என்பதற்காக இஸ்லாமியர் பெரியவர் ஒருவரின் தாடியை இந்துத்துவர்கள் மழித்ததாகவும் அவரை துன்புறுத்தியதாகவும் ஒரு செய்தி பரவியது. விவகாரம் ட்விட்டரில் மிக வேகமாகப் பரவியது. ஒருசில பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், நடிகர்கள் பதிவிட்டனர். இது மதப் பிரச்சினை எனக் கூறி விமர்சித்தனர். இதையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்தச் செய்தி பொய்யானது என்றும், தாயத்து விற்றதில் மோசடி செய்ததாக அவரை ஆறு பேர் சேர்ந்து தாக்கியிருக்கின்றனர். தாக்கியவர்களில் இந்துக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களும் அடக்கம். அதில் மூன்று பேரைக் கைதுசெய்துள்ளோம். இதில் மத ரீதியான பிரச்சினைக்கு இடமில்லை. ஆனால் ட்விட்டரில் இதுபோன்று தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்று போலீசார் கூறினார். போலீசார் தெளிவுப்படுத்திய பின்னரும் சர்ச்சைக்குரிய அந்த ட்வீட்டுகளை ட்விட்டர் நிர்வாகம் நீக்கவில்லை.

இதனிடையே ட்விட்டருக்கான சட்டப் பாதுகாப்பை விலக்கிக்கொண்டதால் அனைத்து பதிவுகளுக்கும் அந்நிறுவனமே பொறுப்பாகும். அதனால் இதுதொடர்பாக ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் (எம்டி) மனிஷ் மகேஸ்வரி மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தச் சர்ச்சை முடிவதற்கு முன்னரே ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட இந்தியா மேப்பில் காஷ்மீர், லடாக் விடுபட்டிருந்தன. தனி நாடுகளைப் போல மேப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகவும் மகேஸ்வரி மீது மற்றொரு எப்ஐஆர் வழக்கு தொடரப்பட்டது.

இச்சூழலில் டெல்லி சைபர் போலீஸ் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்திருக்கிறது. Atheist Republic என்ற அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் இந்து கடவுளான காளியைத் தவறாக சித்தரித்ததாகக் கூறி வழக்கறிஞர் ஆதித்ய சிங் என்பவர் டெல்லி போலீஸில் புகார் கொடுத்திருந்தார். புகாரின் அடிப்படையில் மதவெறுப்பை தூண்டியதாகக் கூறி மகேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டுமென்றால் மத்திய அரசைப் பகைத்துக் கொள்ளாமல் புதிய ஐடி விதிகளை ட்விட்டர் நிறுவனம் கடைப்பிடித்தே தீர வேண்டும். அந்த நிலையைத் தான் உருவாக்க மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.