×

மதிய உணவு திட்டத்தில் இருந்து முட்டை நீக்கம்.. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!

 

மேற்கு வங்கத்தில் அரசு பள்ளிகளுக்கான மதிய உணவு திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் அம்மாநில அரசு ஒப்படைத்ததை அடுத்து மாணவர்களுக்கான முட்டை நீக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த திங்களன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மதிய உணவு இஸ்கான் அமைப்பு வழங்கிடும் என முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். இஸ்கான் வழங்கும் மதிய உணவு தூய்மையான, சாத்விக உணவு என்றும் அவர் தெரிவித்தார். இஸ்கான் என்பது சர்வதேச கிருஷ்ண உணர்வு சங்கம் (International Society for Krishna Consciousness)  ஆகும். இஸ்கானின் அன்னமித்ரா அறக்கட்டளை மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இஸ்கான் ஏற்கனவே எட்டுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் 22 நகரங்களில் இதுபோன்ற மதிய உணவுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், நாடு முழுவதும் சுமார் 12 லட்சம் மாணவர்களுக்கு சேவை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.


மேற்கு வங்கத்தில் அரசு பள்ளிகளுக்கான மதிய உணவு திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் அம்மாநில அரசு ஒப்படைத்ததை அடுத்து மாணவர்களுக்கான முட்டை நீக்கப்பட்டுள்ளது. வாரம் ஒருநாள் முட்டை வழங்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக சோயா, பனீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்தை பறிக்கும் முயற்சி இது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். மேற்கு வங்கத்தில் தற்போது, மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை முட்டையும் , மீதமுள்ள பள்ளி நாட்களில் சாதம், பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு குழம்பும் வழங்கப்படுகின்றன.