×

கர்நாடக முதல்வர் பசவராஜ் குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

 

கர்நாடக முதல்வர் பசவராஜ் கொரோனாவிலிருந்து குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில்  தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கொரோனாவிலிருந்து  விரைவாக குணமடைய வாழ்த்துகள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.