×

ஆடை சர்ச்சை- கிருதி சனோனின் ரக்ஷா பந்தன் விளம்பரம் நீக்கம்

 

கிருதி சனோன் அணிந்திருந்த ஆடை குறித்து சமூக ஊடகங்களில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, அவர் நடித்திருந்த ரக்ஷா பந்தன் விளம்பரத்தை GIVA நகை நிறுவனம் நீக்கியுள்ளது.


கிருத்தி சனோன் நடித்திருந்த ரக்‌ஷா பந்தன் விளம்பரத்தை நீக்கியதாக சம்மந்தப்பட்ட GIVA நகைக்கடை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில்,
நடிகை கிருத்தி சனோன், இந்தோ-வெஸ்டர்ன் உடையில், தனது சகோதரருக்கும், செல்ல நாய்க்கும் ராக்கி கட்டுவது போன்று காட்சியளித்தார். இந்த வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், ஒரு பாரம்பரிய விழாவின் போது அவர் அணிந்திருந்த ஆடையை பலர் விமர்சித்ததுடன், சிலர் அவர் ஒரு நாய்க்கு ராக்கி கட்டியதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிருத்தியின் உடை தேர்வு சர்ச்சையை கிளப்பிய நிலையில், இந்திய கலாச்சாரம் மீது அதிக மரியாதை வைத்திருப்பதாக கூறி GIVA நிறுவனம் விளம்பரத்தை நீக்கியது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/IUAV0eTkZSs?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/IUAV0eTkZSs/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">


சமூக ஊடகங்களில் ஏற்பட்ட பெரும் எதிர்ப்பைத் தொடர்ந்து, நடிகை கிருதி சனோன் இடம்பெற்றிருந்த தனது விளம்பரத்தை GIVA நகை நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் பண்டிகைகள் மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பும் ஆழ்ந்த மரியாதையும் உண்டு. ஒரு பிராண்டாக, இந்த மகிழ்ச்சியான தருணங்களை முழு குடும்பத்துடன் கொண்டாடுவதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த முறை, அந்த அன்பையும் கொண்டாட்டத்தையும் எங்கள் செல்லப் பிராணிகளுக்கும் கொண்டு செல்ல விரும்பினோம். எங்களின் சமீபத்திய விளம்பரம், சமூகத்தின் சில பிரிவினரின் உணர்வுகளை அறியாமல் புண்படுத்தியிருந்தால், அது எங்கள் நோக்கமல்ல. மரியாதையின் காரணமாக, அந்த விளம்பரத்தை அனைத்து ஊடகங்களிலிருந்தும் நாங்கள் திரும்பப் பெற்றுள்ளோம். இந்த பண்டிகைக் காலத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பும் நேர்மறை ஆற்றலும் கிடைக்க வாழ்த்துகிறோம்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.