×

ஒடிசாவில் 10 கி.மீ. தூரம் நடந்தே சென்று கலெக்டர் அலுவலகத்தில் தந்தை மீது புகார் கொடுத்த 6ம் வகுப்பு மாணவி..

ஒடிசாவில் 6ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, 10 கி.மீ. தூரம் நடந்தே சென்று கலெக்டர் அலுவலகத்தில் பேராசை பிடித்த மற்றும் பொறுப்பற்ற தந்தை மீது புகார் கொடுத்தார். லாக்டவுன் அமல்படுத்திய முதல் ஒடிசா அரசு மதிய உணவு திட்டத்தின்கீழ், ஒவ்வொரு மாணவர்களின் வங்கி கணக்கிலும் நாள் ஒன்றுக்கு 8 ரூபாய் டெபாசிட் செய்யும். வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். மேலும் மாணவர்களுக்கு தினமும் 150
 

ஒடிசாவில் 6ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, 10 கி.மீ. தூரம் நடந்தே சென்று கலெக்டர் அலுவலகத்தில் பேராசை பிடித்த மற்றும் பொறுப்பற்ற தந்தை மீது புகார் கொடுத்தார்.

லாக்டவுன் அமல்படுத்திய முதல் ஒடிசா அரசு மதிய உணவு திட்டத்தின்கீழ், ஒவ்வொரு மாணவர்களின் வங்கி கணக்கிலும் நாள் ஒன்றுக்கு 8 ரூபாய் டெபாசிட் செய்யும். வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். மேலும் மாணவர்களுக்கு தினமும் 150 கிராம் அரிசி வழங்கப்படுகிறது.

கலெக்டரிடம் புகார் கொடுத்த மாணவி

இந்த சூழ்நிலையில் கேந்திரபடா மாவட்டத்தில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி தான் வசதிக்கும் ஊரிலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு நடந்தே சென்று, தனக்கு மதிய உணவின் திட்டத்தின் பலன்கள் கிடைக்கவில்லை, அந்த பலன்களை தனது தந்தை அபகரித்து கொள்கிறார் என்று கலெக்டரிடம் புகார் கொடுத்தார். இதனையடுத்து, கலெக்டர் சமார்த் வர்மா, மாணவியின் வங்கி கணக்குக்கு பணம் செல்வதற்கு ஏற்பாடு செய்யும்படியும், சட்டத்துக்கு புறம்பாக மாணவியின் தந்தை அபகரித்த அரிசி மற்றும் பணத்தை மாணவிக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பள்ளியில் மதிய உணவு வழங்கல் (கோப்புபடம்)

பள்ளி மாணவி இது குறித்து கூறுகையில், 2 ஆண்டுகளுக்கு முன் தனது தாயார் இறந்து விட்டார். இதனையடுத்து எனது தந்தை 2வது திருமணம் செய்து கொண்டார். 2019ம் ஆண்டில் என்னை என் தந்தை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். அது முதல் நான் என் மாமா வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு வர வேண்டிய மதிய உணவு திட்டத்தின்கீழ் வர வேண்டிய பலன் எனது தந்தை வங்கி கணக்குக்கு சென்றது. மேலும் பள்ளிக்கு சென்று எனக்கு கிடைக்க வேண்டிய 150 கிராம் அரிசியையும் அவர் வாங்கி கொள்கிறார் என தெரிவித்தார்.