×

பாஜக-எதிர்க்கட்சி எம்பிக்கள் மோதல் - பாஜக எம்.பி ஒருவர் காயம்!

 

நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பிக்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் இடையே ஏற்பட்ட நிலையில், பாஜக எம்.பி ஒருவர் காயம் அடைந்தார்.  

அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை முன்பு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சைக் கண்டித்து INDIA கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸை கண்டித்து பாஜக உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி, கையில் பதாகைகளை ஏந்தி பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டது. அம்பேத்கர் விவகாரத்தில் இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்ட போது மோதல் ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி காயம் அடைந்தார். ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி குற்றம் சாட்டியுள்ளார்.