விரைவில் ஒரு சிகரெட்டின் விலை ரூ.72- மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
புகையிலைப் பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் எதிரொலியாக சிகரெட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு சிகரெட்டின் விலையை ரூ.72 வரை உயர்த்தும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புகையிலைப் பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் எதிரொலியாக சிகரெட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் புகைப்பழக்கம் மக்களிடையே குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ரூ.18 விலையில் இருக்கும் ஒரு சிகரெட்டின் விலை விரைவில் ரூ.72 ஆக உயரும். சிலர் இந்த முடிவை வரவேற்றுள்ளனர், இந்த விலையுயர்வு புகைபிடிப்பதை நிறுத்துவதை ஊக்குவிக்கும் என்று நம்புகிறார்கள். குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இந்த விலையுயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் சிலர் மின்-சிகரெட்டுகள் போன்ற மாற்றுப் பொருட்களுக்கு மாற ஊக்குவிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.