×

என்னை வெற்றி பெற செய்து முதல்வர் ஆக்காவிட்டால் அரசியலில் விட்டு விலகுவேன்- முன்னாள் முதல்வர்

 

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில்  என்னை வெற்றி பெற செய்து முதல்வர் ஆக்காவிட்டால் அரசியலில் விட்டு விலகுவேன் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார்.

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு   கர்னூல் மாவட்ட சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக பட்டிகொண்டாவில் நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் சந்திரபாபு உணர்ச்சிப்பூர்வமான உரை நிகழ்த்தினார். 

அப்போது பேசிய அவர், “ அரசியலில் நான் மூத்த தலைவர், எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் யாரும் என்னை அவமதிக்கத் துணியவில்லை.  ஆனால் ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்ததும் சட்டசபைக்கு சென்றால் என்னை அவமானப்படுத்தினர். என்னை மட்டுமில்லாமல்  என் மனைவியும் அவமானப்படுத்தினர். எனவே  கௌரவுள்ள சட்டப்பேரவையை கௌரவமற்ற சட்டபேரவையாக மாற்றியதால் அன்றே முடிவு செய்து கூறினேன். மீண்டும் கள அளவில் வெற்றி பெற்று சட்டசபையில் மீண்டும் முதல்வராக வந்து கெளவுரவ சட்டபேரவையாக  மாற்றுவேன் இல்லையெனில் சட்டசபைக்கு வரமாட்டோம் என கூறினேன். எனவே நான் சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்றால், அரசியலில் இருக்க வேண்டும் என்றால், மாநிலத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் 2024 ஆண்டில் நடக்கும் தேர்தலில் வெற்றி பெறாமல் என்னால் இவை செய்ய முடியாது. அதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும்.

ஹைதராபாத் நகரை எனது திட்டமிடலின் மூலம் உருவானது. தற்போது ஹைதராபாத் வருமானம் அப்போது நான் செய்த பணியின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. அதேபோன்று ஆந்திராவையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் அதுவரை ஓயமாட்டேன். ஒரு சிலர் எனக்கு வயது ஆகிவிட்டது. எனக்கும் மோடிக்கும் ஒரே வயது தான் அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகிறது. எனக்கு வயது முதிர்வு ஏற்பட்டாலும் நான் மிகவும் இளமையாக உற்சாகத்துடன் உள்ளேன். மற்றவர்களைப் போல் எனக்கு தீய பழக்கங்கள் இல்லை நல்ல சிந்தனையுடன் செயல்பட கூடியவன், எனவே எனது மனமும் உள்ளமும் முழு ஆரோக்கியத்துடன் இளமையுடன் உள்ளது” என தெரிவித்தார்.