#BREAKING மக்களவை தொகுதிகளை 850ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு
Apr 14, 2026, 18:11 IST
2029 நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது.
தொகுதி மறுவரையறை செய்வதற்கான அரசியலமைப்பு திருத்த சட்ட வரைவு மசோதா நகல் வெளியானது. தொகுதி மறுவரையறை காரணமாக மக்களவை தொகுதிகளை 543 லிருந்து 850ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படும் 131வது அரசியல் சாசன மசோதா எம்பிக்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 850 தொகுதிகளில் 33 சதவீதமான 280 தொகுதிகளை மகளிருக்கு ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தொகுதி மறுவரையறை மூலம் மக்களவையில் பெண்களுக்கு 280 சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறினால் 280 இடங்கள் பெண்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகள் 39ல் இருந்து 59ஆக உயருகிறது.