×

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 

 

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நமது நாட்டில் நாடாளுமன்றத்திற்கு, மாநில சட்டப்பேரவைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தமிழகத்திற்கு கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தேர்தல் செலவு மிச்சமாகும் என மத்திய அரசு நினைக்கிறது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நடப்பு கூட்டத் தொடரிலேயே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. இருந்த போதிலும் இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.