கார் வாங்க நினைத்தவர்களுக்கு விழுந்த பேரிடி
இந்தியாவில் இன்று முதல் கார்களின் விலை 3 சதவீதம் வரை உயர்கிறது.
இந்தியாவில் இன்று முதல் கார்களின் விலை 3 சதவீதம் வரை உயர்கிறது. உற்பத்தி செலவை காரணம் காட்டி ஹோண்டா, ஹூண்டாய், ரெனால்ட், நிசான், எம்ஜி மோட்டார்ஸ், BYD, BMW உள்ளிட்ட 9 நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக தங்களது தயாரிப்பு கார்களின் விலையை 0.6% என்ற அளவில் உயர்த்தியது Hyundai நிறுவனம். முன்னதாக இந்நிறுவனத்தின் கார்கள் ரூ.5.47 லட்சத்தில் தொடங்கி ரூ.46.30 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது.
முன்னதாக அடுத்தாண்டு கார்களின் விலையை உயர்த்த போவதில்லை என மகிந்திரா நிறுவனம் முடிவு எடுத்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. உதிரி பாகங்களின் விலை உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே விலையை உயர்த்த மகிந்திரா முடிவு செய்திருந்தது குறிப்பிடதக்கது.