×

4 மாதத்தில் வேலையிழந்த 2 கோடி பேர்… வேலையின்மை உண்மையை மறைக்க முடியாது… ராகுல் காந்தி ஆவேசம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் முதல் கடந்த ஜூலை மாதம் வரை மொத்தம் 1.89 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். அதில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சம்பளதாரர்கள் 1.77 கோடி பேர் வேலை இழந்தனர். அதனை தொடர்ந்து கடந்த மே மாதத்தில் 1 லட்சம் சம்பள பணியாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். அதேசமயம் கடந்த ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இருப்பினும் கடந்த ஜூலையில் 50 லட்சம் வேலை
 

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் முதல் கடந்த ஜூலை மாதம் வரை மொத்தம் 1.89 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். அதில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சம்பளதாரர்கள் 1.77 கோடி பேர் வேலை இழந்தனர். அதனை தொடர்ந்து கடந்த மே மாதத்தில் 1 லட்சம் சம்பள பணியாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். அதேசமயம் கடந்த ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இருப்பினும் கடந்த ஜூலையில் 50 லட்சம் வேலை இழந்துள்ளனர் இந்த தகவல்களை இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் வெளியிட்டுள்ளது.

ராகுல் காந்தி டிவிட்டரில் வேலையின்மை தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து கருத்து பதிவு செய்துள்ளார். இது ராகுல் காந்தி டிவிட்டரில், கடந்த 4 மாதங்களில் சுமார் 2 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். 2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருட்டில் உள்ளது. பேஸ்புக்கில் போலி செய்திகள் மற்றும் வெறுப்புகளை பரப்புவதன் மூலம், வேலையின்மை உண்மை மற்றும் பொருளாதாரத்தின் வெளிப்பாட்டை மக்களிடமிருந்து மறைக்க முடியாது என பதிவு செய்து இருந்தார்.

ராகுல் காந்தி கடந்த சில தினங்களுக்கு முன் டிவிட்டரில், இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகின்றன. அவர்கள் அதன் மூலம் போலி செய்திகளையும், வெறுப்பையும் பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த பயன்படுத்துகிறார்கள். இறுதியாக அமெரிக்க ஊடகங்கள் பேஸ்புக் பற்றிய உண்மையை வெளிப்படுத்தியுள்ளன என பதிவு செய்து இருந்தார்.