×

கேரள போக்குவரத்துறைக்கு ரூ.37 கோடி இழப்பு! 25% பேருந்து கட்டணம் உயர்வு

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்துள்ள கேரள அரசு பொது பேருந்து போக்குவரத்தை தொடங்கியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் மட்டுமே பேருந்துகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பேருந்துகள் இயங்காது என்றும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கேரளாவில் கொரோனா ஒழிப்பு பொது ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கத்தால் இதுவரை 37 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
 

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்துள்ள கேரள அரசு பொது பேருந்து போக்குவரத்தை தொடங்கியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் மட்டுமே பேருந்துகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பேருந்துகள் இயங்காது என்றும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா ஒழிப்பு பொது ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கத்தால் இதுவரை 37 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்டவும், இழப்பை தவிர்க்கவும் கொரோனா காலத்திற்காக மட்டும் கேரளாவில் பேருந்து கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் ஜூலை 2ம் தேதி முதல் அமலாகிறது. பள்ளி மாணவ மாணவியருக்கான 50 சதவீத சலுகைக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.