தொழுகைக்காக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் சஸ்பெண்ட்
May 1, 2025, 17:52 IST
கர்நாடகாவில் தொழுகை நடத்துவதற்காக, பேருந்தை பாதி வழியில் நிறுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தொழுகை செய்வதற்காக கர்நாடகா மாநிலம் ஹுப்ளி-ஹாவேரி சாலையில், ஜவேரி அருகே அரசுப் பேருந்தை ஓட்டுநர் ஏ.கே.முல்லா பாதி வழியில் நிறுத்தினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் கர்நாடக போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்தது. மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டிருந்தார். விசாரணைக்கு பிறகு சம்மந்தப்பட்ட ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.