×

பட்ஜெட்டில் ரயில்வேத் துறைக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு

 

2026-27-ல் மத்திய பட்ஜெட்டில் ரயில்வேத் துறைக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


2026-27-ல் மத்திய பட்ஜெட்டில் ரயில்வேத் துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் ரூ.7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2009 முதல் 2014 வரையிலான காலத்தில் ஒதுக்கப்பட்ட ஆண்டு சராசரி ரூ.879 கோடி என்பதை விட இது 9 மடங்கு அதிகமாகும். உள்கட்டமைப்புகளை மாற்றியமைப்பதற்கானப் பணிகள் ரூ.35,701 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை புதிய பாதைகள் அமைத்தல், ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு, மாநிலம் முழுவதும் பாதுகாப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.

பயணிகளின் அனுபவத்தை மறுவரையறை செய்யும் வகையில், தமிழ்நாட்டில் அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ், மறுசீரமைப்பு செய்ய 77 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவாரூர், மனப்பாறை, சின்னசேலம், பரங்கிமலை உட்பட 18 ரயில் நிலையப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 2-ம் கட்டத்தில் பொள்ளாச்சி சந்திப்பு ரயில் நிலையப் பணிகள் நடைபெற்று வருகின்றன.முதன்மை ரயில் சேவைகள் விரிவாக்கத்தின் மூலம் இம்மாநிலத்தின் பயண அனுபவம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும், 9 அமிர்த பாரத எக்ஸ்பிரஸ் ரயில்களும் தற்போது இயக்கப்படுகின்றன. 2014-க்குப் பின் சுமார் 1,350 கி.மீ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 2,386 கி.மீ தூரத்திற்கான ரயில் பாதையில் 97 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 769 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ரயில்கள் பாதுகாப்புக்கான கவச் பொருத்த 481 அனுமதிக்கப்பட்டு, 427 பணி / ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் உள்ளது.