×

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் என்னென்ன? - முழு அறிவிப்பு உள்ளே! 

 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்காவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. அப்போது, "உலகளவில் இந்திய பொருளாதாரம் தான் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிய அரசு செயலாற்றி வருகிறது. ஆகவே அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளமாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.

அந்த வகையில் விவசாயம் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:

  • 2021-22 ராபி பருவத்தில் கொள்முதலில் 163 லட்சம் விவசாயிகளிடமிருந்து 1208 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரசாயனமற்ற இயற்கை விவசாயம் நாடு முழுவதும் ஊக்குவிக்கப்படும். இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஊரக தொழில் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.

  •  9 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் நோக்கில் கென்-ட்வா இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும். ரூ.44 ஆயிரம் கோடியில் இந்த நீர்ப்பாசன திட்டம் நிறைவேற்றப்படும்.
  • கிருஷ்ணா நதி - பெண்ணாறு - காவிரி நதி நீர் இணைப்பு, காவிரி-கிருஷ்ணா நதிநீர் இணைப்பு உள்ளிட்ட 5 நதி இணைப்புகளுக்கான வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது; அவை செயல்படுத்தப்படுவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதியையும் ஆதரவையும் வழங்கும்.
  • விவசாயத்திலும் ட்ரோன்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். பயிர் மதிப்பீடு, நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தெளித்தல் ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படும்.

  • விவசாயம் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான தொடக்க நிலை நிதியளிக்க நபார்டு வங்கி மூலம் எளிதாக்கப்படும். இது பண்ணை விளைபொருட்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற ஏதுவாகும்.
  • ஸ்டார்ட்அப்களாக தொடங்கப்படும் விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரிவளிக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்கப்படும்.
  • வேளாண் பொருள் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் திறன் அதிகரிக்கப்படும். 

  • வேளாண் பொருட்களுக்கு ரூ.2.73 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் 1.63 கோடி விவசாயிகளிடம் இருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 
  • One station, One product என்ற திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக சங்கிலியை மேம்படுத்தும்.
  • இயற்கை விவசாயம், நவீன விவசாயம், மேலாண்மை உள்ளிட்டவை அடங்கிய பாடத்திட்டம் விவசாய கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும்.
  • சிறுதானியங்களுக்கான ஆண்டாக அறிவிக்கப்படுகிறது. சிறுதானியங்களை உலகம் முழுவதும் வியாபாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.