ரூ.1க்கு அன்லிமிட்டெட் கால், 2ஜிபி டேட்டா- தீபாவளிக்கு புதுத்திட்டத்தை அறிவித்த BSNL
Oct 15, 2025, 21:35 IST
பாரத் சஞ்சார் நிகம் நிறுவனம் (பிஎஸ்என்எல்) தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்காக “தீபாவளி பொனான்சா” என்ற பெயரில் ரூ.1 கட்டணத்தில் ப்ரீபெய்டு திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நாள்தோறும் எண்ணற்ற அழைப்புகள், 2 ஜிபி அளவிலான தரவுகள் மற்றும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதி ஆகியவற்றை 30 நாட்களுக்கு பெறலாம். மொபைல் எண் போர்டபிலிட்டி மூலம் பிஎஸ்என்எல்-க்கு மாறும் வாடிக்கையாளர்களும் இந்த சலுகையை பெறலாம்.
இந்தப் பண்டிகைக்கால சலுகை 2025 அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை வழங்கப்படும்.