தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு! ஆய்வில் அதிர்ச்சி
பீகாரில் உள்ள பெண்களின் தாய்பாலில், அணுகுண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியம் இருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்த மருத்துவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகாரில் உள்ள பெண்களின் தாய்பாலில், அணுகுண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியம் இருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்த மருத்துவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கதிர்வீச்சை உண்டுபண்ணும் யுரேனியம் கலந்திருப்பது ஆபத்து என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக பீகார் மாநிலம் போஜ்பூர், சமஸ்திபூர், ககாரியா, நாலந்தா உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த 40 தாய்மார்களின் தாய்பாலில் யுரேனியம் இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. நிலத்தடிநீர் மாசு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை தாய்பாலில் யுரேனியம் இருப்பதற்கு காரணம் என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த தாய்ப்பாலை குழந்தைகள் அருந்தினால் அவர்களுக்கு புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.