×

‘அறிவார்ந்த’ வாக்காளராக மாற வேண்டுமா? – BolSubol App உங்களை நிச்சயமாக மாற்றும்!

தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டியிருக்கிறது. கட்சிகளின் ஒவ்வொரு அறிவிப்பையும் எதிர்நோக்கி வாக்காளர்கள் அனைவரும் காத்திருக்கிறோம். எந்த வேட்பாளர் நம் தொகுதியில் நிற்கப் போகிறார் என ஆவலுடன் கண் விழித்து பார்க்கிறோம். இந்த அரசியல் அறிவுடன் விசாலமான பார்வை கொண்டிருப்பது ஒவ்வொரு வாக்காளரும் பெருமைப்படக் கூடிய தருணம் தான். ஆனால் வாக்காளர்களுக்கான அதிகாரம் என்ற ஒன்றை நாமும் எளிதில் மறந்துவிடுகிறோம்; நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களும் மறந்தது போல் நடித்துவிடுகின்றனர். நம்முடைய அதிகாரம் என்றால் என்ன என்ற ஐயம் உங்களுக்கு
 

தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டியிருக்கிறது. கட்சிகளின் ஒவ்வொரு அறிவிப்பையும் எதிர்நோக்கி வாக்காளர்கள் அனைவரும் காத்திருக்கிறோம். எந்த வேட்பாளர் நம் தொகுதியில் நிற்கப் போகிறார் என ஆவலுடன் கண் விழித்து பார்க்கிறோம். இந்த அரசியல் அறிவுடன் விசாலமான பார்வை கொண்டிருப்பது ஒவ்வொரு வாக்காளரும் பெருமைப்படக் கூடிய தருணம் தான்.

ஆனால் வாக்காளர்களுக்கான அதிகாரம் என்ற ஒன்றை நாமும் எளிதில் மறந்துவிடுகிறோம்; நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களும் மறந்தது போல் நடித்துவிடுகின்றனர். நம்முடைய அதிகாரம் என்றால் என்ன என்ற ஐயம் உங்களுக்கு எழலாம். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நம்முடைய வாக்குகளைக் குறிவைக்கின்றன.

வாக்குகளை அள்ளுவதற்கு தேர்தல் சமயத்தில் வானளவு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. வெற்றிபெற்ற பின் அதே வேகத்தில் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுகின்றன. நாம் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் அமைதி காக்கின்றன.

நாமும் கத்துகிறோம் கேட்காதது போல் அவர்களும் நடித்துவிடுகிறார்கள். இப்படியே ஐந்து வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. அடுத்து தேர்தல் களைகட்டி விடுகிறது. இது சக்கரமாகச் சுற்றிவரும் நிகழ்வாக இங்கே நெடுநாளாக அரங்கேறிவருகிறது. நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வைப்பதே வாக்காளர்களுக்கான அதிகாரம். உங்கள் அதிகாரம் என்ன என்ற கேள்விக்கும், உங்களின் தேவைகளை எப்படி கேட்டு பெறுவது என்ற குழப்பத்திற்கும் BolSubol செயலி விடையளிக்கிறது.

Demikratika என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் BolSubol செயலி வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே உங்கள் தொகுதியில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களுடனும் தொடர்புகொள்வதற்கான அதிகாரத்தை அளிக்கிறது. எந்தக் கட்சியையும் சாராமல் வாக்காளர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பாரபட்சமற்ற மொபைல் செயலியாக இருக்கும். சராசரியாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலுள்ள அனைத்து தொகுதிகள் குறித்த பொருளாதாரம், அரசியல் தகவல்கள் அனைத்தும் இச்செயலிக்குள் அடக்கம். இந்தத் தகவல்களைக் கொண்டு உங்கள் வேட்பாளர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க ஒரு திறப்பை இச்செயலி நிச்சயமாக காட்டும்.

இதுதொடர்பாக Demikratika நிறுவன இயக்குநர் ஷேஷ்கிரி பேசும்போது, “அரசும் அரசியலும் மக்களின் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்தையும் தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக இருக்கின்றன. அதன் முடிவுகள் பாதகமாகவும் இருக்கலாம். சாதகமாகவும் இருக்கலாம். ஆகவே தான் அரசியல் குறித்த அறிவு நமக்கு அவசியமாகிறது. அரசியல் அறிவு, பொருளாதாரம் மற்றும் சமூக அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ளும்போது அறிவார்ந்த ஒரு வாக்காளராக நாம் மாற உதவுகிறது. நீங்கள் அப்படி மாறுவதற்கு நிச்சயம் BolSubol செயலி உதவும்” என்றார்.

வெறும் தகவல்களை மட்டும் அறிந்துகொள்ளும் ஒரு தளமாக இல்லாமல், வாக்காளர்களின் அறிவுக்கு வேலை கொடுக்கும் விதமாகவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் தேர்தல் பற்றிய விளையாட்டுகளும் இச்செயலில் உண்டு. தேர்தல்களில் வெற்றியாளர்களைக் கணிப்பது, வெற்றிபெறும் இடங்களைக் கணிப்பது உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் நிரம்பியிருக்கின்றன.