×

காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் உயிரிழப்பை வைத்து சர்ச்சை கிளப்ப பிஜேபி திட்டம்

சமீபத்தில் மறைந்த, கன்னியாகுமரி எம்பி, வசந்தகுமார், உடலை ஒப்படைக்கும் போது, கொரோனா தொற்று இல்லை என மருத்துவமனை நிர்வாகம் சர்டிபிகேட் கொடுத்துள்ளது. அதனால்தான் வசந்தகுமாரின் உடல், சென்னையில் அவரது வீட்டிலும், காமராஜர் அரங்கிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு முறைப்படி இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்வை கையில் எடுத்து அரசியல் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறப்புக்குபின்
 

சமீபத்தில் மறைந்த, கன்னியாகுமரி எம்பி, வசந்தகுமார், உடலை ஒப்படைக்கும் போது, கொரோனா தொற்று இல்லை என மருத்துவமனை நிர்வாகம் சர்டிபிகேட் கொடுத்துள்ளது. அதனால்தான் வசந்தகுமாரின் உடல், சென்னையில் அவரது வீட்டிலும், காமராஜர் அரங்கிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு முறைப்படி இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்வை கையில் எடுத்து அரசியல் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறப்புக்குபின் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தாலும், அவரது இறுதிச் சடங்கில் இவ்வளவு பேர் கலந்து கொள்ள அனுமதித்தது எப்படி கேள்வி எழுப்பி இருக்கிறார்களாம். அங்கே வந்தவர்களுக்கு கொரானா வராதா என தமிழக அரசிடம் கேள்விகளை எழுப்பி இருப்பதாக கூறுகிறார்கள். சர்ச்சைகள் மூலமாவது தொடர்ந்து செய்திகள் அடிபட வேண்டும் என நினைக்கிறார்களோ என்னவோ என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக்கொள்ளப்படுகிறது.


-தமிழ்தீபன்