×

ஆபாச வீடியோவில் சிக்கிய பாஜக அமைச்சர் ராஜினாமா !

ஆபாச பட விவகாரத்தில் சிக்கிய கர்நாடக மாநில அமைச்சர் ரமேஷ் ஜகர்ஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடக பாஜக அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி. 60 வயதாகும் இவர், இளம் பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அப்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் நேற்று கன்னட சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி பதவி விலக வேண்டும் அவர் மீது
 

ஆபாச பட விவகாரத்தில் சிக்கிய கர்நாடக மாநில அமைச்சர் ரமேஷ் ஜகர்ஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கர்நாடக பாஜக அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி. 60 வயதாகும் இவர், இளம் பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அப்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் நேற்று கன்னட சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி பதவி விலக வேண்டும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி புகார் தெரிவித்தார். அத்துடன் கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலிக்கு எதிராக பெங்களூரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கர்நாடக அமைச்சர் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். தான் நிரபராதி. என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை; விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும். இருப்பினும் தார்மீக அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமா கடித‌த்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இருப்பினும் அமைச்சர் ஜர்கிஹோலி பதவி விலகியதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.