×

"நடிகர் சல்மான் கானை கொல்ல ரூ.25 லட்சம் பேரம்"

 

சல்மான் கானை கொல்ல பிஷ்னோய் கும்பல் ரூ.25 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

பாலிவுட் நடிகர் சல்மான் கானைக் கொல்ல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஒருவரால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதாக நவி மும்பை போலீஸார் தாக்கல் செய்த புதிய குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. மகாராஷ்டிராவின் பன்வேலில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சல்மான் கானை கொல்ல திட்டமிடப்பட்டதாகவும் மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஹரியானா மாநிலம் பானிபட்டில் சுகா என்ற சுக்பீர் பல்பீர் சிங்கை போலீஸார் புதன்கிழமை கைது செய்ததை அடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்களை படுகொலை செய்ய அமர்த்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிஷ்னோய் கும்பல் உறுப்பினர்களுடன் சேர்ந்து, நடிகருக்கு எதிரான தங்கள் சதித்திட்டத்தை செயல்படுத்த, AK-47, M16 மற்றும் AK92 உள்ளிட்ட பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.