×

“கோர்ட் அவமதிப்பு”- சிறையிலடைக்கப்பட்ட கூட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் -விடுவிக்க கோரி பெண்கள் அமைப்பினர் போராட்டம்..

பீகார் மாநிலம் அரேரியா பகுதியில் ஜூலை 6ம் தேதியன்று ,ஒரு இளம் பெண் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார் .அப்போது அவருக்கு தெரிந்த ஒரு வாலிபர் ,தனக்கு பாடம் நடத்தும்படி கேட்டு, தன்னுடைய வீட்டுக்கு வரும்படி அவரிடம் கேட்டார் .அவர் அதற்கு ஒப்புக்கொண்டதும் அவர் தன்னுடைய பைக்கில் அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு ஒரு இருட்டான தனிமையான இடத்திற்கு போனார் .அங்கு ஏற்கனவே இந்த பெண்ணுக்காக காத்துக்கொண்டிருந்த நான்கு நபர்கள் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர் .பிறகு
 

பீகார் மாநிலம் அரேரியா பகுதியில் ஜூலை 6ம் தேதியன்று ,ஒரு இளம் பெண் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார் .அப்போது அவருக்கு தெரிந்த ஒரு வாலிபர் ,தனக்கு பாடம் நடத்தும்படி கேட்டு, தன்னுடைய வீட்டுக்கு வரும்படி அவரிடம் கேட்டார் .அவர் அதற்கு ஒப்புக்கொண்டதும் அவர் தன்னுடைய பைக்கில் அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு ஒரு இருட்டான தனிமையான இடத்திற்கு போனார் .அங்கு ஏற்கனவே இந்த பெண்ணுக்காக காத்துக்கொண்டிருந்த நான்கு நபர்கள் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர் .பிறகு அவரை அங்கேயே விட்டு விட்டு போய் விட்டனர் .

பிறகு மெல்ல எழுந்த அந்த பெண் மறுநாள் ஜூலை 7ம் தேதி அரேரியா காவல் நிலையத்தில் அந்த நபர்கள்
மீது புகார் கொடுத்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது .

பிறகு அந்த பெண் வீட்டிற்கு போன போது ,வீட்டில் அவரால் நிம்மதியாக இருக்க முடியாததால் ,தனக்கு ஆதரவு தேடி அங்குள்ள சமூக அமைப்பான ஜன் ஜாக்ரன் சக்தி சங்கதன் என்ற அமைப்பில் சேர்ந்தார் .அந்த அமைப்பில் உள்ள பெண்கள் இவரின் பலாத்கார வழக்குக்கு நீதி கேட்டு அவருக்கு ஆதரவாக போராடினார்கள் .இதனால் கவரப்பட்ட அந்த பெண் பிறகு நிரந்தமாக வீட்டை விட்டு வெளியேறி அந்த அமைப்பிலேயே குடியேறினார் .

Gavel And Scales Of Justice On Desk In Law Office

இந்நிலையில் இந்த பாலியல் வழக்கின் போது கீழ் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றபோது அங்கு இருந்த அதிகாரிகள் சில வாக்குமூலம் அவரிடம் கேட்டார்கள் .ஆனால் தன்னுடைய ஜன் ஜாக்ரன் சக்தி அமைப்பினர் இல்லாததால் பயந்த அவர் வாக்குமூலத்திற்கு மறுத்துள்ளார் .இதனால் கோர்ட் அவமதிப்பு வழக்கில் அவரை கைது செய்தனர் .பலாத்காரத்துக்குள்ளான அந்த பெண்ணை சிறையில் அடைத்ததால் ,அவரை விடுவிக்க கோரி பெண்கள் அமைப்பினர் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர் .