×

“2 கோடி பயனாளிகளின் தரவுகள் திருட்டு” – பிக் பாஸ்கெட் நிறுவனம் பரபரப்பு புகார்!

மளிகை பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் நிறுவனமான பிக் பாஸ்கெட்டின், பயனாளிகளின் விவரங்கள் டார்க் வெப்சைட்களில் கசிந்திருப்பதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் தொடங்கி தெரு வீதி வரை திருட்டு சம்பவங்கள் அசால்டாக நடைபெற்று வரும் காலகட்டம் இது. குறிப்பாக சைபர் குற்றங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. என்ன தான் மக்கள் பாஸ்வோர்டு போட்டு பாதுகாப்பாக இருந்தாலும், ஒரு நிமிடத்தில் ஹேக்கர்கள் அனைத்து தரவுகளையும் கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில், மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங்
 

மளிகை பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் நிறுவனமான பிக் பாஸ்கெட்டின், பயனாளிகளின் விவரங்கள் டார்க் வெப்சைட்களில் கசிந்திருப்பதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் தொடங்கி தெரு வீதி வரை திருட்டு சம்பவங்கள் அசால்டாக நடைபெற்று வரும் காலகட்டம் இது. குறிப்பாக சைபர் குற்றங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. என்ன தான் மக்கள் பாஸ்வோர்டு போட்டு பாதுகாப்பாக இருந்தாலும், ஒரு நிமிடத்தில் ஹேக்கர்கள் அனைத்து தரவுகளையும் கைப்பற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிக் பாஸ்கெட்டின் 2 கோடி பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டதாக பிக் பாஸ்கெட் நிறுவனம் பெங்களூரு போலீசார் புகார் அளித்துள்ளது. அந்த புகாரின் பேரில், தகவல்களை ஹேக் செய்த நபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஹேக்கர்கள் தரவுகளை டார்க் வெப்சைட்டில் பதிவிட்டு ரூ.30 லட்சம் பணத்திற்கு விற்க முயன்றதாக தகவல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.