×

கொரோனா தடுப்பு ஊசியை உடலில் செலுத்தி கொண்டரா மருத்துவர்? பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் உடன் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசியான Covaxin-ஐ மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது. முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு வெற்றி கிடைத்ததால் அடுத்த கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி Covaxin மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் வருகிற ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி ஐ.சி.எம்.ஆர் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து
 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் உடன் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசியான Covaxin-ஐ மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது.

முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு வெற்றி கிடைத்ததால் அடுத்த கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி Covaxin மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் வருகிற ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி ஐ.சி.எம்.ஆர் உத்தரவிட்டுள்ளது.


இதையடுத்து இந்த மருந்தை நிறுவனத்தின் துணை தலைவர் மருத்துவர் விகே ஸ்ரீநிவாஸ் தனது உடலில் செலுத்தி சோதனை செய்து வருகிறார். இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசியை முதலில் உடலில் செலுத்தி கொண்ட நபர் இவர் தான் என்ற செய்தி சமூகவலைதளத்தில் பரவின.


இந்நிலையில் இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில் , “பாரத் பயோடெக் பெயரில் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படமும் செய்தியும் எங்களால் அறிவிக்கப்பட்டது இல்லை. அது ரத்த பரிசோதனை செய்யும் புகைப்படம் தான்” என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் பாரத் பயோடெக் நிறுவனம் பெயரில் இணையத்தில் பரவிய செய்தி போலியானது என்பதை தெளிவுப்படுத்தி கொள்கிறோம்.