×

சிறந்த பிரதமர்: முதலிடத்தில் மோடி… எந்த இடத்தில் இந்திரா காந்தி? ஆய்வு முடிவுகள்!

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல் இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரை பல தலைவர்களின் தலைமையில் ஆட்சி நடைபெற்றுள்ளது. இந்தியாவின் சிறந்த பிரதமர் யார் என்ற ஆய்வினை MOTN (MOOD OF THE NATION) எனும் அமைப்பு சமீபத்தில் நடத்தியுள்ளது. அந்த அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகள் பல சுவாரஸ்யங்களைத் தந்துள்ளது. தற்போது பிரதமராகப் பதவி வகிக்கும் நரேந்திர மோடியே மிகச் சிறந்த பிரதமர் என 44 சதவிகித்ததினர் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அவர் சிறந்த
 

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல் இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரை பல தலைவர்களின் தலைமையில் ஆட்சி நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் சிறந்த பிரதமர் யார் என்ற ஆய்வினை MOTN (MOOD OF THE NATION) எனும் அமைப்பு சமீபத்தில் நடத்தியுள்ளது.

அந்த அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகள் பல சுவாரஸ்யங்களைத் தந்துள்ளது. தற்போது பிரதமராகப் பதவி வகிக்கும் நரேந்திர மோடியே மிகச் சிறந்த பிரதமர் என 44 சதவிகித்ததினர் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அவர் சிறந்த பிரதமர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடமும் பிஜேபி கட்சியைச் சேர்ந்த பிரதமருக்கே. ஆம். 14 சதவிகித வாக்குகளை வாஜ்பாய் பெற்றுள்ளார்.

அப்படியெனில், இந்தியாவின் இரும்பு மங்கை என்று புகழப்படுபவரும், இந்தியாவின் முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்திக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? மூன்றாம் இடம். 12 சதவிகித வாக்குகளை இந்திரா காந்தி பெற்றிருக்கிறார்.

மன்மோகன் சிங் 7 சதவிகித வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும் 5 சதவிகித வாக்குகளை லால்பகதூர் சாஸ்துரி பெற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளுக்கு ரேட்டிங் தருவதில் Good என்று 48 சதவிகிதத்தினரும் Outstanding என 30 சதவிகிதத்தினரும் Avarege என 17 சதவிகிதத்தினரும் Poor 5 சதவிதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா 39 சதவிகித வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 9 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது. இதன்மூலம் அவர் அந்தப் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார்.