×

இயல்புநிலைக்கு திரும்பும் பெங்களூரு! நாளை முதல் 3,500 பேருந்துகளை இயக்க முடிவு!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நாளையில் இருந்து 3,500 பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 ஆம் கட்ட ஊரடங்கு கடந்த 17- ஆம் தேதி முடிவடைந்தது. அதன்பின் மாநிலங்களுக்குள் பொது போக்குவரத்தை தொடங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. அதன்படி ஒவ்வொரு மாநிலமும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பொது போக்குவரத்தை தொடங்கியுள்ளது. பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேர் பயணம் செய்ய
 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நாளையில் இருந்து 3,500 பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 ஆம் கட்ட ஊரடங்கு கடந்த 17- ஆம் தேதி முடிவடைந்தது. அதன்பின் மாநிலங்களுக்குள் பொது போக்குவரத்தை தொடங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. அதன்படி ஒவ்வொரு மாநிலமும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பொது போக்குவரத்தை தொடங்கியுள்ளது. பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேர் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஏற்கனவே பொது பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் நாளை முதல் 3500 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 30 பேர் வரை பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கர்நாடகா மாநிலத்தில் புதிதாக 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் கொரோனாவுக்கு இருவர் உயிரிழந்துள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கர்நாடகா கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது.