×

“குடும்பத்தையே குதறிய கொரானா”-கணவர் இறந்தார் -மனைவி குழந்தைகள் தற்கொலைக்கு முயன்று நினைவிழந்த நிலை …

கணவர் கொரானா நோயால் இறந்ததால் ,அதிர்ச்சியுற்ற அவரின் மனைவி தன்னுடைய குழந்தைகளோடு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ,சிலிகுரியின் சம்பாசரி பகுதியில் ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவருக்கு ஜூலை 3ம் தேதி கொரானா தொற்று பரவியது .இதனால் அவரை சிலிகுரி மருத்துவமனையில் சேர்த்தனர் .ஆனால் அவருக்கு இதயக்கோளாறு இருந்ததால் அவர் கொரானா சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் . இதனால் அதிர்ச்சியுற்ற அவரின் 40 வயது
 

கணவர் கொரானா நோயால் இறந்ததால் ,அதிர்ச்சியுற்ற அவரின் மனைவி தன்னுடைய குழந்தைகளோடு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ,சிலிகுரியின் சம்பாசரி பகுதியில் ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவருக்கு ஜூலை 3ம் தேதி கொரானா தொற்று பரவியது .இதனால் அவரை சிலிகுரி மருத்துவமனையில் சேர்த்தனர் .ஆனால் அவருக்கு இதயக்கோளாறு இருந்ததால் அவர் கொரானா சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் .

இதனால் அதிர்ச்சியுற்ற அவரின் 40 வயது மனைவி அவரின் இரண்டு மைனர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள ரயில்வே நிலையத்தில் ரயில் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார் .


அப்போது அந்த காட்சியினை பார்த்த ரயில் காவலாளி ஒருவர், மூவரையும் காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார் .இந்த தற்கொலை முயற்சியில் அந்த பெண்ணுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சுய நினைவை இழந்தார் .இரண்டு குழந்தைகளுக்கும் கை ,கால்கள் உடைந்தது .மூவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .இதன் பின்னணியில் கணவர் இறந்ததால் பொருளாதார சிக்கலில் குழந்தைகளை வளர்ப்பது சிரமம் என்பதால் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாக போலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது ,மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர் .