×

ஆகஸ்ட் 1 முதல் தாறுமாறாக உயரும் வங்கி சேவைக் கட்டணம்! – மக்களே உஷார்!

வங்கிகள் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பல்வேறு சேவைகளுக்கு கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவது என்று முடிவு செய்துள்ளன. எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று நிதி ஆலோசகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எல்லோரும் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும், எல்லோரும் டிஜிட்டல் பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றனர். ஆனால், இப்படி டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்ய கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் இலவச சேவையாக கொடுத்தார்கள்… எல்லோரும் அதற்கு பழகிய
 

வங்கிகள் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பல்வேறு சேவைகளுக்கு கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவது என்று முடிவு செய்துள்ளன. எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று நிதி ஆலோசகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லோரும் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும், எல்லோரும் டிஜிட்டல் பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றனர். ஆனால், இப்படி டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்ய கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் இலவச சேவையாக கொடுத்தார்கள்… எல்லோரும் அதற்கு பழகிய நிலையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது கட்டணத்தை உயர்த்தியும் வருகின்றனர்.


இந்த நிலையில் வருகிற 1ம் தேதி முதல் ஆக்சிஸ், கோட்டக் மஹிந்திரா, மகாராஷ்டிரா வங்கி, ஆர்.பி.எல் வங்கிகளில் சேவை கட்டணம் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச பராமரிப்பு செலவு, குறைந்தபட்ச டெபாசிட் பராமரிப்பு என பலவற்றின் கட்டணம் அதிரடியாக பல மடங்கு உயர்ந்துள்ளது.
சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச சராசரியை பராமரிக்காவிட்டால் கட்டணம் விதிக்கப்படும்.


மகாராஷ்டிரா வங்கியில் குறைந்தபட்ச சராசரி மாதத்துக்கு 1500ல் இருந்து ரூ.2000ம் ஆக உயர்த்தப்படுகிறது. தவறுபவர்களுக்கு நகர்ப்பகுதி எனில் ரூ.75, புறநகர் பகுதி எனில் ரூ.50, கிராமப்புற வங்கி எனில் ரூ.20 அபராதம் விதிக்கப்படும். வங்கியில் நேரடியாக பணத்தை எடுப்பது, டெபாசிட் செய்வது என்று மூன்று முறை மட்டுமே இலவசமாக மேற்கொள்ளலாம். அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.100 வசூலிக்கப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


கோடக் மஹிந்திரா வங்கியில் சேமிப்பு, சம்பள கணக்கு வைத்திருப்போர் மாதத்துக்கு ஐந்து பரிவர்த்தனைக்குப் பிறகு ஒவ்வொரு முறையும் பணத்தைத் திரும்பப் பெற ரூ.20 வசூலிக்கப்படும். நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ.8.5 வசூலிக்கப்படும்.
ஆக்சிஸ் வங்கியில் இ.சி.எஸ் பரிவர்த்தனைக்கு இதுவரை கட்டணம் இல்லை. இனி ரூ.25 வசூலிக்கப்படும். 10, 20, 50 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்யும்போது 1000 நோட்டுகளுக்கு ரூ.100 என்ற அளவில் கையாளுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் வங்கிக் கணக்குகளைக் கையாளுவதில் கவனமாக இருப்பது நல்லது.