☰
×

இப்ப இதான் ட்ரெண்ட்... மொத்தம் 21 மனைவி! தினமும் ஒருத்தருடன் யாசகம் பெறும் லெஜண்ட் கணவன்! 

 

பங்களாதேஷ்ஷில் 21 மனைவிகளை கொண்டுள்ள மோரு மியான்(35) என்ற யாசகர்தான் தற்போது இணையத்தில் பிரபலமாகிவருகிறார். 

ஒரு இளைஞர் ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு முன் நிலையான வீடு, வேலை, சம்பாத்தியம் என சமூகத்தில் ஒரு அந்தஸ்தை பெறுவது வழக்கம். ஆனால் வங்காளதேசத்தைச் சேர்ந்த 35 வயதான மோரு மியான், தனக்கு 21 மனைவிகள் இருந்தபோதிலும், பிச்சை எடுத்துப் பிழைத்து வருகிறார்.  அத்துணை பெண்களும் தன்னைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்ததாகவும், தான் ஒருவரையும் மறுத்ததில்லை என்றும் அவர் கூறுகிறார். தினமும் ஒரு மனைவியை தன்னுடன் அழைத்துக்கொண்டு யாசகம் பெற செல்வதாகவும், சில சமயங்களில் அவர்களது பெயர்களைக் கூட மறந்துவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 21 மனைவிகள் இருந்தபோதிலும், மோரு ஓர் அறை கொண்ட குடிசையில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

மோரு மியான் பிச்சை எடுப்பதையே தனது பிரதான வருமான ஆதாரமாகக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.  எந்தப் பெண்ணிடமும் தானாக முன்வந்து திருமணம் செய்துகொள்ளக் கேட்டதில்லை என்று கூறும் மோரு மியான், பகல் நேரங்களில், எல்லா மனைவிகளும் முறைப்படி தன்னுடன் வந்து பிச்சை எடுக்க உதவுவார்கள் என்றும் பெருமையாக கூறுகிறார்.