×

ஐந்து ஆண்டுகளில் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரா பெங்களூரு மாறும் – நிபுணர்கள் எச்சரிக்கை!

அதிகரித்து வரும் காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால் இன்னும் ஐந்தே ஆண்டுகளில் பெங்களூரு நகரம் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெங்களூரு நகரம் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அதிக வேலை வாய்ப்புகள், மென்பொருள் நிறுவனங்கள் காரணமாக பெங்களூரு நகரைத் தேர்வு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நகரின் சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் மூலம் காற்றில் கலந்திருக்கும் துகள்கள் அளவு 50
 

அதிகரித்து வரும் காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால் இன்னும் ஐந்தே ஆண்டுகளில் பெங்களூரு நகரம் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


பெங்களூரு நகரம் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அதிக வேலை வாய்ப்புகள், மென்பொருள் நிறுவனங்கள் காரணமாக பெங்களூரு நகரைத் தேர்வு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நகரின் சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது.


போக்குவரத்து நெரிசல் மூலம் காற்றில் கலந்திருக்கும் துகள்கள் அளவு 50 சதவிகிதம் அதிகரிக்கிறது என்றும் கட்டுமானப் பணியின் போது 80 சதவிகிதம் வரை துகள்கள் வெளிப்படுவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது, பெங்களூரு நகர காற்றில் கலந்திருக்கும் நுண்துகள்கள் எண்ணிக்கை 54 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதை இப்போது கட்டுப்படுத்த தவறினால் 2030ல் இது 70 சதவிகிதமாக அதிகரிக்கும். சல்பர் டை ஆக்சைடு 35 சதவிகிதமாகவும், நைட்ரஜன் ஆக்சைடு 55 சதவிகிதமாகவும், கார்பன் மோனாக்சைடு 107 சதவிகிதமாகவும், காற்றில் உள்ள கனிம சேர்மங்கள் 133 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெங்களூரு நகரின் மாசைக் கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், இதே நிலை தொடர்ந்தால் 2025ம் ஆண்டிலேயே மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக பெங்களூரு மாறிவிடும். வளர்ச்சி என்ற பெயரில் மேலும் பல திட்டங்கள் கொண்டு வரும்போது இந்த பாதிப்பு இன்னும் முன்கூட்டியே நிகழக் கூட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், நிபுணர்களின் தொடர் எச்சரிக்கையைத் தொடர்ந்து மாசைக் கட்டுப்படுத்த 44 அம்ச திட்டத்தை அரசு கடந்த ஆண்டு வகுத்தது. ஒரு வருடம் ஆன நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, நகரின் மாசு அதிகரித்துள்ளதாக சூழலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.