×

கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை: இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!

புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய எடியூரப்பா, இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் உருமாறியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு போடப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், இரவு நேர முழு ஊரடங்கின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை
 

புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய எடியூரப்பா, இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் உருமாறியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு போடப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், இரவு நேர முழு ஊரடங்கின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

இதையடுத்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், வெளிநாடுகளில் இருந்து மாநிலத்திற்குள் வரும் பயணிகளை கண்காணித்து வருவதாகவும் கொரோனா வைரஸ் தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்படும் இந்த ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக, பிரிட்டன் உடனான போக்குவரத்தை பல நாடுகள் தற்காலிகமாக துண்டித்துள்ளன. அந்த வகையில், இந்தியாவிலும் பிரிட்டன் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கிருந்து சென்னை வந்த ஒருவருக்கும் டெல்லி வந்த 5 பேருக்கும் கொரோனா உறுதியாகி இருக்கும் நிலையில், பரவலை தடுக்கும் பொருட்டு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுகிறது.