×

பானிபூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழப்பு

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்டின் கிரிடிஹ் பகுதியில் சாலையோரத்தில் கடையில் பானிபூரி சாப்பிட்ட ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் உட்பட 18 பேர் கடுமையான வாந்தி, காய்ச்சல், வயிற்றுவலி போன்ற உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பானிபூரி வியாபாரி தலைமறைவானதை அடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். உணவு நஞ்சானதாக சந்தேகிக்கப்படும் இந்த வழக்கு குறித்து நிர்வாகமும் சுகாதாரத் துறையும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.