×

பங்கரவாதிகள் தப்பிக்க உதவி செய்த டி.எஸ்.பி-க்கு பெயில்! – அதிர்ச்சியில் மக்கள்

பங்கரவாதிகள் தப்பிக்க உதவி செய்த டி.எஸ்.பி-க்கு பெயில்! – அதிர்ச்சியில் மக்கள் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தப்பிக்க உதவி செய்ததாக கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி-க்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் டி.எஸ்.பி-யாக இருந்தவர் தவிந்தர் சிங். இவர் அசீப் உல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரைத் தப்பிக்க உதவியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்திய போலீஸ் உயர்
 

பங்கரவாதிகள் தப்பிக்க உதவி செய்த டி.எஸ்.பி-க்கு பெயில்! – அதிர்ச்சியில் மக்கள்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தப்பிக்க உதவி செய்ததாக கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி-க்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் டி.எஸ்.பி-யாக இருந்தவர் தவிந்தர் சிங். இவர் அசீப் உல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரைத் தப்பிக்க உதவியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்திய போலீஸ் உயர் அதிகாரியே பயங்கரவாதிகளுக்கு துணை போனது பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தவிந்தர் சிங் மீதான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தவிந்தர் சிங் மீது போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. கைது செய்யப்பட்டதிலிருந்து 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதியை காரணம் காட்டி தவிந்தர் சிங் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நாட்டுக்காக ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கும் நிலையில், கையும் களவுமாக சிக்கிய போலீஸ் அதிகாரி மீது குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்ய முடியவில்லையா என்ற கோபம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.