×

மூன்று மாத தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் வங்கி சேவைக்கு கட்டணம்!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமுடக்கம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஊரடங்களால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இதனிடையே இஎம்ஐ கட்டணம், வங்கி சேவை கட்டணம் போன்றவை கடந்த மூன்று மாதங்களாக தளர்வில் இருந்தது. கொரோனா ஊரடங்கையொட்டி வங்கிகளின் சேவைகள், ஏடிஎம்கள் கட்டணங்கள் ஆகியவற்றில் அரசு அளித்த தளர்வுகள் தற்போது முடிந்துள்ள நிலையில் மீண்டும் மேற்கூறிய சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு பெறப்படும் சேவைக்
 

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமுடக்கம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஊரடங்களால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இதனிடையே இஎம்ஐ கட்டணம், வங்கி சேவை கட்டணம் போன்றவை கடந்த மூன்று மாதங்களாக தளர்வில் இருந்தது.

கொரோனா ஊரடங்கையொட்டி வங்கிகளின் சேவைகள், ஏடிஎம்கள் கட்டணங்கள் ஆகியவற்றில் அரசு அளித்த தளர்வுகள் தற்போது முடிந்துள்ள நிலையில் மீண்டும் மேற்கூறிய சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு பெறப்படும் சேவைக் கட்டணம் , மினிமம் பேலஸ் வைத்திருக்க வலியுறுத்தல், ஆன்லைன் சேவை கட்டணம் போன்றவை கடந்த மூன்று மாதமாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் இவை மீண்டும் நடைமுறைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.