×

அயோத்தி ராமஜென்ம பூமி ராமர் கோவில் பூசாரிக்கு கொரோனா… பக்தர்கள் அதிர்ச்சி!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடக்க விழா அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் ராமஜென்ம பூமி ராமர் கோவில் பூசாரிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் வருகிற 5ம் தேதி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளது. பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்க உள்ளதால் ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் பூசாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது
 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடக்க விழா அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் ராமஜென்ம பூமி ராமர் கோவில் பூசாரிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் வருகிற 5ம் தேதி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்க

உள்ளது. பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்க உள்ளதால் ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் பூசாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது உள்ள தற்காலிக ராமர் கோவிலில் பிரதீப் தாஸ் என்பவர்தான் தினமும் பூஜைகளை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. யோகி ஆதித்யநாத் ராமஜென்ம பூமிக்கு வரும்போது எல்லாம் அவர்தான் பிரதீப் தான் பூஜை செய்வார்.

தற்போது அவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவருடன் சேர்த்து 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கோவிலில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா தொற்று வி.ஐ.பி-க்களுக்கு பரவுவதைத் தடுக்க பூசாரி உள்ளிட்டவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..