×

அயோத்தி அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாசுக்கு உயர் சிகிச்சை! – உ.பி முதல்வர் உத்தரவு

கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாசுக்கு ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாசுக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஏற்கவே கோவில் தலைமை அர்ச்சகர் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாசுக்கு ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாசுக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஏற்கவே கோவில் தலைமை அர்ச்சகர் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூமி பூஜையின் போது மேடையில் பிரதமர் மோடியுடன் ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் நிர்த்திய கோபால் தாசும் ஒருவர். இதனால், மற்றவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நிர்த்திய கோபால் தாசை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றி சிறந்த சிகிச்சை அளிக்க மதுரா மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து மதுரா மாவட்ட மாஜிஸ்திரேட் சர்வக்யா ராம் மிஸ்ரா கூறுகையில், “நிர்த்திய கோபால் தாசுக்கு லேசான காய்ச்சல் உள்ளது. லேசாக சுவாசப் பிரச்னை உள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நலம் குறித்து தகவல் அறிந்ததும் சிறப்பு மருத்துவர்கள் குழு உடனடியாக அவர் தங்கியிருந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதித்து உயர் சிகிச்சை வழங்க மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.