×

டெல்லி கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி

 

டெல்லி செங்கோட்டை பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் எட்டு பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது. இதில் அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. தகவலறிந்தவுடன் 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. மேலும் காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கார் வெடித்துச் சிதறியதில் மேலும் சில வாகனங்கள் தீப்பற்றியுள்ளதாக டெல்லி தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் உடல்கள் சிதறிக்கிடக்கும் அதிர்ச்சி காட்சிகளும் வெளியாகி பதைபதைக்கவைக்கின்றன. படுகாயமடைந்தவர்கள் LNJP மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையம், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மும்பையின் முக்கிய இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன.