×

மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்க அசாம் பா.ஜ.க. அரசு முடிவு… மாணவர்கள் ஹேப்பி…

அசாமில் பா.ஜ.க. அரசு தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அம்மாநிலத்தில் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அசாமில் முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசு கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்
 

அசாமில் பா.ஜ.க. அரசு தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அம்மாநிலத்தில் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அசாமில் முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசு கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரக்யன் பாரதி என்னும் திட்டத்தை அசாம் அரசு செயல்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.

இந்த திட்டத்தின்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் தர மதிப்பில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்களை வழங்குகிறது. தற்போது மாணவர்களுக்கும் இலவச ஸ்கூட்டர்களை வழங்க அம்மாநில பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. போர்டுவாரில் மஜூலி மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த 121 மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் சர்பானந்தா சோனாவால் மாணவிகளிடம் ஸ்கூட்டர் சாவியை வழங்கினார். அந்த விழாவில் முதல்வர் சர்பானந்தா சோனாவால் பேசுகையில் கூறியதாவது:

சர்பானந்தா சோனாவால்

மாநிலத்தின் தொலைதூர மூலைகளிலும் வசிக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்குவது அவர்களின் படிப்புக்கு உதவும். வரும் நாட்களில் அரசு இந்த திட்டத்தை மாணவர்களுக்கும் செயல்படுத்தும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூகத்தில் தரமான மாற்றங்களை உறுதிப்படுத்த தங்கள் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். அரசாங்கம் பள்ளிகளையும், கல்லூரிகளையும் மட்டுமே கட்ட முடியும். ஆனால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஒரு சிறந்த குடிமகனாக மாற்ற உதவும் பொறுப்பை ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.