×

வருவாயும் குறைந்தது, லாபமும் குறைந்தது.. கவலையில் ஏசியன் பெயிண்ட்ஸ்

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் (2020 ஜனவரி-மார்ச்) ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.462 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 2.1 சதவீதம் குறைவாகும். மேலும் சென்ற காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் 7.1 சதவீதம் குறைந்து ரூ.4,635.60 கோடியாக வீழ்ந்தது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு அமல்படுத்திய நாடு தழுவிய லாக்டவுன் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தை கடுமையாக பாதித்தது. ஏசியன்
 

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் (2020 ஜனவரி-மார்ச்) ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.462 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 2.1 சதவீதம் குறைவாகும். மேலும் சென்ற காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் 7.1 சதவீதம் குறைந்து ரூ.4,635.60 கோடியாக வீழ்ந்தது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு அமல்படுத்திய நாடு தழுவிய லாக்டவுன் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தை கடுமையாக பாதித்தது. ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான அமித் சிங்களே கூறுகையில், 2020 மார்ச்சில் லாக்டவுன் காரணமாக அலங்கார வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விற்பனை பாதித்தது. இருப்பினும் அந்த காலாண்டின் முதல் இரண்டு மாதங்களில் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி கண்டது என தெரிவித்தார்.

2019-20 முழு நிதியாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபம் 25.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம் வருவாய் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் சென்ற நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.1.50 வழங்குவதாக அறிவித்துள்ளது.