×

27 ஆண்டுகளாக குஜராத்தில் ஆணவத்துடன் ஆட்சி செய்யும் பாஜக- அரவிந்த் கெஜ்ரிவால்

 

27 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சிக்கும் மக்களுக்குமான இடைவெளி அதிகரித்து உள்ளது. விரைவில் மாற்றுக் கட்சி தேவை என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் வருடத்தின் இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி குஜராத் மாநிலத்தில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே குஜராத் மாநிலத்தின் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர்கள் முழுவதுமாக மாற்றப்பட்டு தேர்தல் பணி முடிக்க விடப்பட்டுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி முறை பயணமாக குஜராத் சென்றுள்ளார். நேற்றைய தினம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் உரையாற்றினார். 

இந்நிலையில் இன்று கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “27 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. அவர்கள் ஆணவமாக ஆட்சி செய்து வருகின்றனர். மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி மிகப் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தை கூட குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பார்க்கவில்லை. ஆனால் நான் சென்று சந்தித்து அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்
எனக் கூறினார்.