×

“300 யூனிட்டுகளுக்கு இலவச மின்சாரம்”

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஆட்சியை அமைக்க முனைப்பு காட்டிவரும் ஆம் ஆத்மி, அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும்
 

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஆட்சியை அமைக்க முனைப்பு காட்டிவரும் ஆம் ஆத்மி, அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும், 24 மணி நேர மின்சாரம் வழங்க சிறிது காலம் எடுக்கும்,ஆனால் நாங்கள் அதை செய்வோம் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார். இதே தேர்தல் வாக்குறுதிகளை, பஞ்சாப் மாநில மக்களுக்கும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பை விமர்சித்துள்ள முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தேர்தலுக்காக யார் வேண்டுமானாலும் என்ன கதை வேண்டுமானாலும் அடித்துவிடலாம், தற்போது 24 மணி் நேரமும் மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்தார்.