ஆபத்தான உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி?- மத்திய அரசு விளக்கம்
சமோசா, ஜிலேபி, லட்டு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீது எச்சரிக்கை லேபில்கள் ஒட்ட வேண்டும் என வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
சமோசா, ஜிலேபி அடைத்து விற்கப்படும் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் வர உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. உடல் பருமனை குறைக்க, எண்ணெய், சர்க்கரை அளவு தொடர்பாக, எச்சரிக்கை வாசகம் வெளியிடவே திட்டமிட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ எஸ்க் தளத்தில்,”சமோசா, ஜிலேபி மற்றும் லட்டு போன்ற இந்திய சிற்றுண்டிகளுக்கு எதிராக சுகாதார அமைச்சகம் சுகாதார எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளதாக சில ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
✅ உண்மை சரிபார்ப்பு: இந்தக் கூற்று தவறானது.
✅ எந்தவொரு குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் அல்லது தெரு விற்பனையாளர்களுக்கு எதிராக மத்திய சுகாதார அமைச்சகம் அத்தகைய எச்சரிக்கையை வெளியிடவில்லை.
🛑 தவறான தகவல்களுக்கு ஏமாறாதீர்கள்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.