×

பெட்ரோல் விலை உயர்வுக்கு ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்ததே காரணம்- பாஜக எம்எல்ஏ

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்ததால்தான் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வந்தாலும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி வரும் காரணத்தினால் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உச்சத்தை எட்டி வருகிறது. உலக அளவில் கச்சா எண்ணையின் விலை குறைந்துள்ளதால் உடனடியாக மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்க வேண்டும்
 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்ததால்தான் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வந்தாலும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி வரும் காரணத்தினால் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உச்சத்தை எட்டி வருகிறது. உலக அளவில் கச்சா எண்ணையின் விலை குறைந்துள்ளதால் உடனடியாக மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்க வேண்டும் என தினந்தோறும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால் உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து விட்டது அதனால் நம் நாட்டில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து விட்டது என கர்நாடக மாநிலம் தார்வாட் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் பெல்லாட் கூறியுள்ளார். அரவிந்த் பெல்லாட் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதிற்கு கூறியுள்ள புதிய காரணத்தை கொண்டு நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்து எடுத்து வருகின்றனர். தாலிபான்களால் உலக அளவில் பெட்ரோல், டீசல், கேஸ் விநியோகம் பிரச்சினைக்கு உள்ளாகிவிட்டது அதனால் அனைத்து விலையும் ஏறிவிட்டது என்றும், இதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அரவிந்த் பெல்லாட் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.