×

மம்தாவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! நடிகை ராஜினாமா

 

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகை ருக்மிணி மாலிக்.


15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் தற்போது அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பதற்றங்கள் மற்றும் பிளவுகளுக்கு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான ருக்மிணி கோயல் மாலிக் தனது பதவியை ராஜினாமா செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்ட 3 மாதங்களுக்குள் பதவியிலிருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்த அவர், அவரிடம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ராஜினாமா செய்த கையோடு மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சர் புபேந்திர யாதவையும் அவர் நேரில் சந்தித்து பேசினார். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான மதன் மித்ரா, கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்த 2 நாட்களில் ருக்மிணி கோயல் மாலிக்கும் ராஜினாமா செய்துள்ளார், இது மம்தா பானர்ஜியின் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.  கோயலுக்கு முன்னதாக,திரிணாமூல் காங்கிரஸ் எம்பிக்கள் சுகேந்து சேகர் ராய், பிரகாஷ் சிக் பராக் மற்றும் சுஷ்மிதா தேப் ஆகியோர் ஏற்கனவே தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.