×

பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் அறிவிப்பு

 

பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய தலைவர் நட்டாவின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, பீகார் அமைச்சராக உள்ல நிதின் நபினை செயல் தலைவராக நியமித்து பார்லிமெண்ட்ரி போர்ட் அறிவித்துள்ளது. பாஜகவில் செயல் தலைவராக அறிவிக்கப்படுபவரே தேசிய தலைவராகவும் நியமிக்கப்படும் வழக்கம் உள்ளது. பீகாரில் நிதிஷ்குமார் அமைச்சரவையில் சாலை கட்டுமான அமைச்சராக இருந்தவர் நிதின் நபின். பீகாரை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகனே நிதின் நபின் சின்ஹா என்பது குறிப்பிடதக்கது. 

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வரலாற்று வெற்றியைப் பெற்றிருந்த நிலையில் நம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவருக்கு தேசிய அளவிலான மிகப்பெரிய அங்கீகாரத்தை பாரதிய ஜனதா கட்சி வழங்கி உள்ளது