நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் அறிவிப்பு
Nov 26, 2026, 20:59 IST
மக்களவையின் சிறப்புக் கூட்டம் வரும் நவம்பர் 30 ஆம் தேதியும், மாநிலங்களவையின் சிறப்பு கூட்டம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 30 ஆம் தேதி மக்களவையும், டிசம்பர் 2ஆம் தேதி மாநிலங்களவையும் தனித்தனியாக கூட உள்ளது. இரு அவைகளின் கூட்டங்களும் டிசம்பர் மூன்றாம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறு வரையறை மசோதா, பொது சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற திட்டமிட்டு இந்த கூட்டத்தொடரை பாஜக கூட்டியுள்ளது.