×

மீண்டும் உயரும் கொரோனா… அதிர்ச்சியில் மத்திய, மாநில அரசுகள் !

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 38,465 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் 43,509 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,14,84,605லிருந்து 3,15,28,114 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38,465 ஆக உள்ளது. அத்துடன் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 640 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,22,022 லிருந்து 4,22,662 ஆக அதிகரித்துள்ளது. நாடு
 

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 38,465 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் 43,509 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,14,84,605லிருந்து 3,15,28,114 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38,465 ஆக உள்ளது. அத்துடன் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 640 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,22,022 லிருந்து 4,22,662 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 4,03,840 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 97.38% ஆக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று 43,654 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் இன்று 43,509 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு நேற்று போல் இன்றும் உயர்ந்தே காணப்படுகிறது. அத்துடன் இந்தியாவில் ஒரேநாளில் 43,92,697 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதுவரை மொத்தம் 45,07,06,257 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.மீண்டும் இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவது மத்திய, மாநில அரசுகளுக்கு சவாலான ஒன்றாக மாறியுள்ளது.