×

திருப்பதியில் கடத்தப்பட்ட நபரை அதிரடியாக மீட்ட போலீசார்

ஆந்திரா ஆந்திர மாநிலம் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய வந்த நபரை காரில் கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். நெல்லூரை சேர்ந்த கேண்டீன் உரிமையாளர் ஹனுமந்தராவ் என்பவர், தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கிருந்த தனியார் காட்டேஜில் தங்கியிருந்த ஹனுமந்த ராவை இன்று காலை மர்மநபர்கள் சிலர் காரில் கடத்திச்சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, திருப்பதி மலை அடிவாரத்தில் கடத்தல்காரர்களிடம் இருந்து
 

ஆந்திரா

ஆந்திர மாநிலம் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய வந்த நபரை காரில் கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். நெல்லூரை சேர்ந்த கேண்டீன் உரிமையாளர் ஹனுமந்தராவ் என்பவர், தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கிருந்த தனியார் காட்டேஜில் தங்கியிருந்த ஹனுமந்த ராவை இன்று காலை மர்மநபர்கள் சிலர் காரில் கடத்திச்சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து,

திருப்பதி மலை அடிவாரத்தில் கடத்தல்காரர்களிடம் இருந்து அனுமந்தராவை மீட்ட போலீசார், கடத்தல்காரர்களை பிடித்து விசாரணை விசாரித்தனர். இதில் ஹனுமந்தராவ், ஒருவரிடம் 20 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு அதனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவர் தப்பியோடியதும் தெரியவந்தது. மேலும், திருப்பதி மலையில் ஹனுமந்தராவ் இருப்பதை அறிந்த பெனுகொண்டாவை சேர்ந்த ஸ்ரீனு, சுரேஷ், குமார் ஆகியோர் திருப்பதிக்கு வந்து காரில் கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து ஆட்கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் கைதுசெய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.